சர்க்கரை நோயாளிகள் முழுவதுமாக குணமடைய முடியுமா?

Webdunia
திங்கள், 26 டிசம்பர் 2022 (21:51 IST)
சர்க்கரை நோய் வந்தவர்கள் ஆயுள் முழுவதும் அந்த நோய்க்கு சிகிச்சை பெற வேண்டும் என்று கூறப்பட்டு வரும் நிலையில் பிரபல மருத்துவர் ஒருவர் சர்க்கரை நோய் குறித்த இந்த சந்தேகத்தை தீர்த்து உள்ளார். 
 
 சர்க்கரை நோயாளிகள் முழுவதுமாக குணமாவது என்பது மிகவும் குறைந்த அளவே சாத்தியம் என்றும் சர்க்கரை நோயின் தன்மையை குறைத்து கொண்டு இருக்கலாமே தவிர முழுவதுமாக குணமாக வாய்ப்பு இல்லை என்றும் கூறியுள்ளார். 
 
இன்சுலின் பற்றாக்குறை காரணமாக ஏற்படும் சர்க்கரை நோய் மற்றும் இன்சுலின் செயல்படாத தன்மை காரணமாக ஏற்படும் சர்க்கரை நோய் என 2 வகை சர்க்கரை நோய் இருப்பதாகவும் இதில் உடற்பயிற்சி உணவு கட்டுப்பாடு நேரம் தவறாமல் சாப்பிடுதல் உள்ளிட்டவற்றை கடைப்பிடித்தால் சர்க்கரை நோயை குறைக்க முடியுமே தவிர முழுவதுமாக குணமாவது என்பது வாய்ப்பு மிகவும் குறைவு என்று தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்