குழந்தைகளின் கண்பார்வை பாதிப்புக்கு என்ன காரணம்?

Webdunia
வெள்ளி, 2 ஜூன் 2023 (18:52 IST)
தற்போது மிகச் சிறிய வயதிலேயே குழந்தைகளுக்கு கண் பார்வை பாதிப்பு ஏற்பட்டு வருவதை அடுத்து இது எதனால் ஏற்படுகிறது என்பதை பார்ப்போம். 
 
குழந்தைகளின் கண் பார்வை குறைபாட்டிற்கு செல்போன் பயன்பாடு ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. குழந்தைகளை சமாதானப்படுத்த பெற்றோர்கள் தற்போது செல்போனை வாங்கி கொடுப்பதால் செல்போனில் விளையாடுவதில்  குழந்தைகள் நேரம் செலவழிக்கின்றனர்.
 
ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்ட பின்னர் அனைத்து குழந்தைகளிடம் தற்போது செல்போன் உள்ளது. ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் கண்பார்வை பாதிக்கப்படுவதற்கு முக்கிய காரணம் செல்போன் என்று கூறப்படுகிறது. 
 
அதேபோல் அதிகமான நேரம் டிவி பார்ப்பது, குறைந்த வெளிச்சத்தில் படிப்பது, செல்போன் ஃப்ளாஷ் லைட்டுக்களில் இருந்து வரும் ஒளி விழித்திரையை பாதிக்க வைப்பது உள்ளிட்டவை காரணமாக உள்ளன
 
எனவே குழந்தைகளை ஒரு குறிப்பிட்ட வயது வரை செல்போன் பயன்படுத்த அனுமதிக்காமல் இருக்க பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்