ஆரோக்கியமான சுவையான மாம்பழ கேசரி செய்வது எப்படி? வாங்க பார்க்கலாம்!.

Raj Kumar

வியாழன், 23 மே 2024 (18:22 IST)
மாம்பழத்தை விரும்பாதவர் மாநிலத்தில் உண்டோ என்னும் சொல்லுக்கு ஏற்ப மாம்பழம் விரும்பாத ஒரு நபரை பார்ப்பது என்பது மிகவும் கடினம். இந்த கோடை காலத்தில் மட்டுமே கிடைக்கும் மாம்பழம் மக்களால் அதிகம் விரும்பப்படும் பழமாக இருக்கிறது.



அந்த மாம்பழத்தை கொண்டு சுவையான இனிப்பு பலகாரமான மாம்பழம் கேசரி எப்படி செய்து என இப்போது பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

•           ரவை -  1 கப்
•           தோல், விதை நீக்கிய மாம்பழம் – 1 கப்
•           சர்க்கரை -  1 கப்
•           நெய் – ½ கப்
•           முந்திரி, பாதாம், திராட்சை – ¼ கப்
•           ஏலக்காய், குங்கமப்பூ – தேவையான அளவு




செய்முறை:

1.         முதலில் ஒரு அகண்ட பாத்திரத்தில் நெய் விட்டு அதை மிதமான சூட்டில் காய்ச்சவும்.
2.         பிறகு அதில் ரவையை சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்துக்கொள்ளவும்.
3.         அதில் நறுக்கி வைத்துள்ள மாம்பழம், சர்க்கரை சேர்த்து சிறிது தண்ணீரும் சேர்த்து கொள்ளவும்.
4.         இவை அனைத்தையும் நன்கு கலந்து சிறிது நேரம் கொதிக்க வைக்கவும்.
5.         பிறகு தீயை குறைத்துவிட்டு 10 முதல் 15 நிமிடங்கள் மிதமான சூட்டில் வேகவிடவும்.
6.         இறுதியாக நறுக்கிய முந்திரி ஏலக்காய், திராட்சை, ஏலக்காய் தூள், குங்குமப்பூ ஆகியவற்றை சேர்த்துகொள்ளவும்.
7.         இறக்கும் முன்பு கொஞ்சமாக நெய்யை விட்டி இறக்கினால் சுவையான மாம்பழ கேசரி தயார்.

தேவையான அளவிற்கு சர்க்கரை சேர்த்துக்கொள்ளலாம். கேசரியில் வேறு உலர்ந்த பழங்களோ, அல்லது பேரீச்சையோ கலப்பது சுவையை இன்னும் அதிகரிக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்