இளவரசர் போன்று குழந்தைகளை அழைத்து சென்று அட்மிஷன் போட்ட தனியார் பள்ளி!

வியாழன், 1 ஜூன் 2023 (11:25 IST)
மதுரையில் தனியார் மழலையர் பள்ளியில் மாணவர் சேர்க்கையின் போது சேர்ந்த மாணவ மாணவிகளை பல்லாக்கில் அமர வைத்து இளவரசர் இளவரசி போல் பள்ளிக்குள் அழைத்து சென்றதால் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்
 
மதுரையில் தனியார் மை மதுரை  மழலையர் பள்ளி கல்விக் குழுமம் சார்பாக 2023 ,24 , கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையில் இன்று இந்த ஆண்டு கல்வி பயில வருபவர்களை மகிழ்விக்கும் வகையில் புலன் வழிக் கல்வியில் பயில பயிற்சி அளிக்கும் வகையிலும் மாணவர்களுக்கென தனி பல்லக்கு உருவாக்கியு  அவர்களை பல்லாக்கில் அமர வைத்து பெற்றோர் உதவியுடன் தூக்கி அவர்களை இளவரசர் இளவரசிகளாக பாவித்து அழைத்து வந்து தமிழன்னைக்கு தமிழ் எழுத்துக்களால் ஆராதித்து அரிசியில் அவர் தம் தாய்மொழியில் முதல் எழுத்தை எழுதப் பயிற்றுவித்து 7ஆம் தேதி திறக்க இருக்கும் பள்ளிக்கு மாணவர்களை தயார் படுத்தினர்.
 
மாணவர்களும் பெற்றோர்களும் மகிழ்வுடன் பங்கு பெற்று கல்விப்பயணத்திற்கு ஆயத்தப் படுத்திக் கொண்டனர். மேலும்  தனது குழந்தைகளை பள்ளியில் சேர்க்கு பொழுது பல்லாக்கில் அமர வைத்தும் அந்த குழந்தைகளை தூக்கி வரும் பொழுது ராஜாதி ராஜா ராஜ கம்பீரர் பராக் பராக்  என்று அங்குள்ள ஆசிரியர்கள் சொல்லும் பொழுது பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்