5 பாப் அப் கேமராக்களுடன் களமிறங்கும் சியோமி!!

Webdunia
செவ்வாய், 12 நவம்பர் 2019 (18:18 IST)
சியோமி நிறுவனம் ஐந்து சென்சார்கள் கொண்ட பாப் அப் கேமரா ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
சியோமி நிறுவனம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஒன்றை உருவாக்கி வருவதாக தெரிகிறது, இந்த ஸ்மார்ட்போனில்  ஐந்து சென்சார்கள் கொண்ட பாப் அப் கேமரா வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. 
 
இவைதவிர சியோமி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் வெளியாகவில்லை. முன்னதாக நோக்கியா 9 பியூர்வியூ ஸ்மார்ட்போன் ஐந்து கேமராக்களுடனும் சியோமி Mi சிசி9 ப்ரோ ஸ்மார்ட்போன் ஐந்து கேமரா சென்சார்களுடன் அறிமுகம் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்