இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள சத்திய மூர்த்தி சாலையில் கடந்த 15 ஆம் தேதி,இரவு 9.45 மணிக்கு ஒரு முதியவர் சென்றுகொண்டிருந்தார். அவரை நோட்டமிட்டு, இருசக்கர வாகனத்தில் வந்த 3 இளைஞர்கள் மக்கள் நடமாட்டம் அப்பகுதியில் இருந்தும்கூட, அவரை பலமாக தாக்கிவிட்டு, அவரிடமிருந்த செல்போனை பறித்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.