ரூ.69-க்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால் + 4ஜி டேட்டா: வோடபோன் ஆஃபர்!!

Webdunia
வெள்ளி, 27 அக்டோபர் 2017 (14:08 IST)
வோடபோன் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் டே மற்றும் சூப்பர் வீக் திட்டங்களை வழங்கி வருகிறது. 


 
 
ஒரு நாள் மட்டுமே செல்லுபடியாகும் சூப்பர் டே திட்டமும், ஒரு வார காலம் செல்லுபடியாகும் சூப்பர் வீக் திட்டமும் வோடபோன் வாடிக்கையாளர்களுக்கு பரிச்சயமான ஒன்றுதான். 
 
அண்மையில், ரூ.69 என்ற விலையில் சூப்பர் வீக் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் மற்றும் 500 எம்பி டேட்டா வழங்குகிறது.
 
டெல்லி என்சிஆர் வாடிக்கையாளர்களுக்கு ரூ.52 திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் 250 எம்பி 3ஜி/4ஜி டேட்டா, வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளை பயன்படுத்திக்கொள்ளாம்.
 
ரூ.76 சூப்பர் வீக் திட்டமானது 500 எம்பி அளவிலான 4ஜி டேட்டாவுடன் வரம்பற்ற எவெளியூர் மற்றும் உள்ளூர் அழைப்புகளை வழங்குகிறது.
 
ரூ.87 திட்டம் ப்ரீபெய்ட் பயனர்களுக்கு 250 எம்பி அளவிலான 4ஜி டேட்டா, வரம்பற்ற அழைப்புகளை வழங்குகிறது.  

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்