தமிழகம் முழுவதும் டெங்கு கொசு ஒழிப்பதில் தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் டெங்கு கொசுக்களை உற்பத்தி செய்யும் வகையில் சுகாதாரமற்று இருக்கும் நிறுவனங்கள், வீடுகள் ஆகியவற்றுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் சுகாதார அதிகாரிகள் நேற்று வேலூரில் ஆய்வு நடத்தி வந்தபோது ரயில்வே கேட் அருகே உள்ள நடிகரும் டைரக்டருமான டி.ராஜேந்தருக்கு சொந்தமான 2 தியேட்டர்களிலும் ஆய்வு செய்தனர். அப்போது அந்த தியேட்டரில் டெங்கு கொசுவை உற்பத்தி செய்யும் வகையில் ஒரு தண்ணீர் தொட்டி இருந்ததை பார்த்த டி.ஆர்.ஓ திரையரங்க உரிமையாளரான டி.ராஜேந்தருக்கு ரூ.10 ஆயிரம் அபாரதம் விதித்தார். அதுமட்டுமின்றி உடனடியாக அந்த தொட்டியை இடிக்கவும் உத்தரவிட்டார்.