குறைந்தபட்ச இருப்புத் தொகை தேவையில்லை; ஆனால்... ஸ்டேட் பேங்க் செக்!!

Webdunia
செவ்வாய், 18 ஏப்ரல் 2017 (15:47 IST)
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா பின் வரும் சில சேமிப்புக் கணக்குகளுக்கு குறைந்தபட்ச இருப்புத் தொகை தேவையில்லை என்று அறிவித்து இருக்கின்றது.


 
 
எஸ்பிஐ வங்கி ஏப்ரல் 1 முதல் 1000 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரை குறைந்தபட்ச இருப்புத் தொகை இருக்க வேண்டும் அறிவித்தது. ஆனால் இந்த நிபந்தனை சில சேமிப்பு திட்டங்களுக்கு விலக்கு அளித்துள்ளது.
 
சிறு சேமிப்பு வங்கி கணக்கு:
 
இதில் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதிகபட்சம் 50,000 ரூபாய் மட்டுமே சேமிப்புக் கணக்கில் வைக்க முடியும். வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம் கார்டு இலவசமாக வழங்கப்படும்.
 
அடிப்படை சேமிப்பு கணக்கு:
 
இந்தச் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு எஸ்பிஐ வங்கியில் பிற சேமிப்புக் கணக்குகள் துவங்க முடியாது. இதற்கும் குறைந்தபட்ச இருப்புத்தொகை அவசியமில்லை.
 
சம்பள வங்கி கணக்கு:
 
எஸ்பிஐ வங்கியில் சம்பளம் வங்கி கணக்குகளும் உள்ளன. இதை பயன்படுத்திச் சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு இலவசமாக இணையதள வங்கி சேவை கணக்கு, மொபைல் வங்கி சேவை கணக்கு, செக் புக் உள்ளிட்ட பிற நன்மைகள் அளிக்கப்படும். இந்த வங்கி கணக்கிற்கும் குறைந்தபட்ச இருப்புத் தொகை தேவையில்லை.
 
ஜன் தன் யோஜனா திட்டம்:
 
பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் கணக்கை திறந்தால், குறைந்தபட்ச இருப்பைப் பராமரிக்கத் தேவையில்லை.
அடுத்த கட்டுரையில்