90 ஜிபி டேட்டா வேண்டுமா? இந்த நம்பருக்கு டயல் பண்ணி என்ஜாய் பண்ணுங்க...

Webdunia
செவ்வாய், 10 செப்டம்பர் 2019 (13:34 IST)
பிஎஸ்என்எல் நிறுவனம் யாரும் எதிர்பாராத வகையில் ஓணத்திற்கு சிறப்பு டேட்டா சலுகைகளை வழங்குவதாக அறிவித்துள்ளது. 
 
ஓணம் ஸ்மார்ட் பிளான் என்ற ஸ்பெஷல் ரீசார்ஜ் பெயரில் பிஎஸ்என்எல் நிறுவனமானது இந்த ஓணம் பண்டிகையை தனது வாடிக்கையாளர்களுடன் கொண்டாட முடிவெடுத்து இந்த சலுகை குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. 
 
ரூ.234-க்கு வழங்கப்படும் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி வரம்பில்லாத 90 ஜிபி அளவிலான டேட்டா 30 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இதனுடன், 100 எஸ்எம்எஸ், 250 நிமிட ஃப்ரீ வாய்ஸ் கால் சேவையும் வழங்கப்படுகிறது. 
இந்த சலுகையை பெற பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் PLAN <space> SMART என டைப் செய்து 123 எனும் எண்ணிற்கு மெசேஜ் அனுப்ப வேண்டும். இல்லையென்றால் *444*234# என்கிற எண்ணிற்கு டயல் செய்து பயனடையலாம். 
 
குறிப்பு: இந்த சலுகை கேரள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே. அதோடு செப். 15 ஆம் தேதி வரை மட்டுமே செல்லுபடியாகும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்