மகனின் பிறந்த நாளுக்கு விமானத்தை பரிசளித்த தந்தை .. நெகிழ்ச்சி சம்பவம்

திங்கள், 9 செப்டம்பர் 2019 (15:41 IST)
மண்ணில் மனிதனாகப் பிறந்தவர்கள், தமது பிறந்த தினத்தை நினைவு கூர்வது என்பது முக்கியமான ஒன்று. இன்று பலரும் தம் பிறந்த நாளை ஆடம்படமாகவே கொண்டாடிவருகின்றனர். அதிலும் இளைஞர்களைக் கேட்கவே வேண்டாம்...அந்தளவு குதூகலமாக பிறந்தநாளைக் கொண்டாடுவர்.  இந்த நிலையில், சவூதி அரேபியாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர்  தனது மகனது பிறந்தநாளுக்கு இரு விமானங்களை வாங்கிக்கொடுத்துள்ளார் என்ற  செய்தி இணையதளங்களில் வைரலாகிவருகிறது.

சவூதி அரேபியா நாட்டைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர், தனது மகனின் பிறந்தநாளுக்கு எதாவது வித்தியாசமாகப் பரிசளிக்க வேண்டுமென நினைத்திருந்தார்.

எனவே, மகனுக்கு விமானங்கள் மிகவும் பிடிக்கும் என்பதால், அதை வாங்கவும் முடிவு செய்தார்.

அதன்பின்னர், ஏர்பஸ் நிறுவனத்தை தொடர்பு கொண்டு,தான் விமான பொம்பை வாங்கவுள்ளதாகக் கூறியுள்ளார். பின்னர் அவர்கள் விமானத்தின் வடிவம், அதன் இருக்கைகளை பற்றி ஏர்பஸ் நிறுவனத்தினர் தொழிலதிபரிடம் கேட்டதாகத் தெரிகிறது.ஆனால் உண்மையான விமானத்தைப் போன்ற சிறப்பாக பொம்பௌ விசாரிக்கிறார்களோ என நினைத்தவர் எல்லாவற்றையும் கூறியுள்ளார்.

பின்னர், சில நாட்கள் கழித்து உண்மையான விமானத்தை ஆர்டர் செய்துவிட்டார் எனவும் அதற்கு, இந்திய மதிப்பில் ரூ. 2600 கோடியை, தன் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் என்ற கார்டு மூலம் இரு விமானிகளுக்குச் செலுத்தியுள்ளார். அந்த பொம்மை விமானத்திற்கு இது கூடுதலான விலை என்றாலும் மகனுக்காக அந்த தொகையைக் கொடுத்துள்ளார். அதன்பிறகுதான் தான் செலுத்தியது பொம்மை விமானத்துக்கான தொகை அல்ல, உண்மையான விமானத்துக்கானது என்பது தொழிலதிபருக்கு  தெரிந்துள்ளது.

பணம் கொடுத்து விமானம் வாங்கிய விமானத்தில் ஒன்றை மகனுக்கும், இன்னொன்றை உறவினருக்கு தொழிலதிபர் பரிசளித்ததாகத் தகவல்கள் வெளியாகிறது.

ஆனால், இந்த தகவல்கள் உண்மையில்லை, எனவும் இது பொய்யான செய்தி எனவும், இந்த விமானம் பற்றிய வதந்தி மற்றும் பொய்யான செய்திகளை உலகம் முழுக்க பரப்பி வரும் தின் ஏர் டுடே (thin air today ) என்ற பத்திரிக்கையில் இந்த செய்தி வந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்