ஊரை அடித்துக் கொள்ளையடித்தவர் சசிகலா - அமைச்சர் சண்முகம்

Webdunia
சனி, 6 பிப்ரவரி 2021 (13:49 IST)
ஊரை அடித்துக் கொள்ளையடித்த வழக்கில் சிறைசென்று 4 ஆண்டுகள் கழித்து விடுதலையானவர் சசிகலா என்று அமைச்சர் சண்முகம் கூறியுள்ளார்.

ஊழல் வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனைக் காலம் முடிந்த நிலையில் சசிகலா சமீபத்தில் விடுதலை ஆனார். இந்நிலையில் தற்போது கொரோனா தொற்றுக் காரணமாக பெங்களூரில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் சசிகலா வரும் 8 ஆம் தேதி தமிழகம் வரவுள்ளார்.

 
அவருக்கு சென்னையில் 12 இடங்களில் வரவேற்பு அளிக்க தினகரன் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.

இந்நிலையில், சசிகலா அண்மையில் விக்டோரியா மருத்துவமனையில் இருந்து டிஸ்ஸார்ஜ் ஆனபோது, தனது காரில் கொடியில் அதிமுக கொடி கட்டியிருந்தார்.  இதற்கு அதிமுகவினர் விமர்சித்தனர்.

இதுகுறித்துப் பதில் அளித்த தினகரன் , சசிகலா, அதிமுக பொதுச்செயலாளர் அதனால் அவர் அக்கொடியைப் பயன்படுத்த உரிமை உண்டு என கூறி இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது எனக் கூறினார்.

சமீபத்தில் அதிமுக கொடியைப் பயன்படுத்தியதுதொடர்பாக சசிகலா மீது புகாரளிக்க தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி. சண்முகம் ஆகியோர் சென்னை டிஜிபி அலுவலத்தில் புகாரளித்தனர்.

 இந்நிலையில், இன்று காலை அமமுக காவல்துறையிடம் மனு அளித்த நிலையில் தற்போது அதிமுக சார்ப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அப்போது, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சண்முகம், ஊரை அடித்துக் கொள்ளையடித்த வழக்கில் சிறைசென்று 4 ஆண்டுகள் கழித்து விடுதலையாகிய  சசிகலா அதிமுகவை சொந்தம் கொண்டாடுவதை ஏற்க முடியாது என்று அமைச்சர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே அதிமுக சார்பில் ஏற்கனவே புகார் அளித்துள்ள நிலையில் தற்போது மீண்டும் புகார் அளித்துள்ளனர்.

மேலும், நாளை மறுநாள் சசிகலா சென்னை வரும்போது வரும்போது அவருக்கு பிரமாண்டமான வரவேற்புக் கொடுக்க நினைத்துள்ள தினகரன் தலைமையிலான அமமுவினர், சென்னையில் பேரணி நடத்தவும் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்