ஜாகிர் கானுக்கு திருமணம்: பாலிவுட் நடிகை சகாரிகாவுடன் டும் டும் டும்!

Webdunia
செவ்வாய், 25 ஏப்ரல் 2017 (10:59 IST)
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜாகிர் கான் பாலிவுட் நடிகை சகாரிகா காட்கேவை திருமணம் செய்ய உள்ளார். இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.


 
 
38 வயதான இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஜாகிர் கான் இந்திய கிரிக்கெட் அணிக்கு செய்த சேவை அளப்பறியது. உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சாளரான அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும்வரை திருமணமே செய்துகொள்ளாமல் இருந்தார்.
 
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ஜாகிர் கான் தற்போது ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறார். அவர் டெல்லி அணியின் கேப்டனாக உள்ளார். இதுவரை 95 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள ஜாகிர் கான் 100 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
 
இந்நிலையில் ஜாகிர் கான் தனக்கு பாலிவுட் நடிகை சகாரிகா காட்கே உடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். இவர்களின் திருமணம் விரைவில் நடக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்