இன்று நடைபெறும் ஐபிஎல் குவாலிபயர் போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதி போட்டிக்கு செல்லும் என்ற நிலையில் டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங் தேர்வு செய்துள்ளது.
இன்றைய போட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் – சன்ரைசர்ஸ் அணிகள் இடையே வாழ்வா சாவா யுத்தமாக இருக்கும் என்பது உறுதி. இதற்கு முன்பாகவே லீக் போட்டியில் இரு அணிகளும் இவ்வாறான கடைசி நொடி வரையிலான த்ரில்லிங் ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்த நிலையில் சன்ரைசர்ஸ் அணி வெறும் 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தற்போது டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்துள்ள ராஜஸ்தான் அணி ஆரம்பமே சன்ரைசர்ஸின் ரன்களை கட்டுப்படுத்த முயலும்.