லன்கா பிரீமியர் லீக் ஏலத்தில் அறிவிக்கப்படாத சுரேஷ் ரெய்னா பெயர்… பின்னணி என்ன?

Webdunia
வியாழன், 15 ஜூன் 2023 (07:38 IST)
சிஎஸ்கே அணிக்காக பல ஆண்டுகள் விளையாடிய சுரேஷ் ரெய்னா 2021 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். இந்தியாவுக்காக விளையாடுவதில் இருந்து அவர் 2020 ஆம் ஆண்டே ஓய்வை அறிவித்தார். இதையடுத்து சில உள்ளூர் டி 20 லீக் போட்டிகளில் அவர் விளையாடி வந்தார்.

இந்நிலையில் இப்போது ரெய்னா மீண்டும் கிரிக்கெட் பேட்டை கையில் எடுக்கவுள்ளார். லங்கா பிரிமியர் லீக் தொடரில் விளையாட தன்னுடைய பெயரை பதிந்துகொண்டுள்ளார் என செய்திகள் வெளியாகின. அவருக்கு அடிப்படை விலையாக 40000 அமெரிக்க டாலர்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டது.

இதையடுத்து நேற்று LPL ஏலத்தில் சுரேஷ் ரெய்னாவின் பெயர் அழைக்கப்படவில்லை. இதற்கான காரணமாக ரெய்னா இந்த தொடரில் கலந்துகொள்ள தன் பெயரை பதிவு செய்யவே இல்லை என்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே அவரது பெயரை பட்டியலில் இணைத்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்