சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த சுப்மன் கில்

Webdunia
வியாழன், 19 ஜனவரி 2023 (21:17 IST)
சச்சின் டெண்டுல்கரின் சாதனையை 24 ஆண்டுகளுக்குப் பின் சுப்மன் கில் முறியடித்துள்ளார்.
 

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது.

நேற்றைய போட்டியில், சர்வதேச ஒரு நாள் போட்டியில் குறைந்த வயதில் (23) இரட்டை சதம் அடித்த வீரர் (208 ரன்கள்),  இரட்டை அசதம் அடித்த 5 வது இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்தார் சுப்மன் கில்.

மேலும், 19 இன்னிங்ஸில் 1000 ரன்கள் அடித்த  முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற சாதனையையும் படைத்தார் சுப்மன் கில்.

இந்த  நிலையில், அவர் 24 ஆண்டிற்குப் பின் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.

 ALSO READ: இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் புதிய சாதனை

கடந்த 1999 ஆம் ஆண்டில் சச்சின் டெண்டுல்கர்  நியூசிலாந்து அணிக்கு எதிராக 186 ரன் கள் அடித்தார். இந்த அணிக்கு எதிராக தனி நபர் எடுத்த அதிகபட்ச ரன் கள் இதுதான்.

இந்த நிலையில், இந்த சாதனையை நேற்றைய போட்டியில் சச்சின் சுப்மன் கில் முயறிடித்துள்ளதற்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்