இந்த போட்டியில் இந்திய அணியின் வீரர் ஹர்திக் பாண்ட்யாவின் விக்கெட் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. மிட்செல் வீசிய பந்தில் ஹர்திக் பாண்ட்யா பவுல்ட் ஆனதாக அப்பீல் கேட்கப்பட்டது. விக்கெட் கீப்பர் டாம் லாதம்மின் கையுறை ஸ்டம்ப்பை ஒட்டி இருந்ததால் சந்தேகமடைந்த நடுவர் மூன்றாம் நடுவரிடம் ஆலோசனைக் கேட்டார். டி வி ரிப்ளேயில் பந்து ஸ்டம்ப்புக்கு மேலாக சென்றது தெளிவாக தெரிந்தது. அனால் கீப்பரின் கையுறை ஸ்டம்புக்கு பின்னால் இருந்ததாக தெரிவித்த நடுவர், சந்தேகத்தின் பலனை பவுலருக்கு வழங்கி விக்கெட் என அறிவித்தார். நடுவரின் இந்த முடிவு தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.