குங்ஃபூ தற்காப்பு கலை பயிற்சி பள்ளியின் 25வது ஆண்டு விழா!

J.Durai

திங்கள், 27 மே 2024 (14:41 IST)
கன்னியாகுமரி  மாவட்டம் கருங்கல்லில் அமைந்துள்ள தானியார் திருமண மண்டபத்தில்  இன்டர்நேஷனல் ஷாவோலின் சைனீஸ் மங்கி குங்ஃபூ தற்காப்புகலை பயிற்சி பள்ளியின் 25வது ஆண்டு விழா மற்றும் பிளாக் பெல்ட்  வழங்கும் விழாவும் நடைபெற்றது.
 
இந்த விழாவானது கிராண்ட் மாஸ்டர்  டாக்டர்  நாகராஜன்  தலைமையில் நடைபெற்றது.
 
தமிழ்நாடு,ஆந்திரா, கர்நாடகா,கேரளா, மும்பை,டெல்லி ஆகிய பகுதியில் இருந்து சுமார் 150 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். 
 
ஒரு வார காலம்  நடைபெற்ற இந்த உடல் தகுதி மற்றும் தற்காப்பு பயிற்சி தேர்வுக்கு பின்னர் மாணவர்களுக்கு சான்றிதழ்கள்  வழங்கி கௌரவப்படுத்தப்பட்டனர்
 
இதனை  தொடர்ந்து  தேசிய அளவிலான போட்டிகளுக்கு தயாராக இருக்கும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்ச்சியும் அளிக்கப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்