சானியா மிர்சா பேரை சொல்லி ஷோயப் மாலிக் மனைவியை சீண்டிய ரசிகர்கள்… ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?

vinoth
புதன், 21 பிப்ரவரி 2024 (07:35 IST)
இந்திய டென்னிஸ் வீரர் சானியா மிர்சாவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்குப் பின்னர் தம்பதிகள் துபாயில் வசித்து வருகின்றனர். இருவரும் தங்கள் சொந்த நாட்டுக்காக விளையாடினர்.

இருவருமே தற்போது தங்கள் துறையில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டனர். இந்நிலையில் இப்போது சானியா மிர்சா ஷோயப் மாலிக் தம்பதிகள் விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதன் பின்னர்  மாலிக் சமீபத்தில் பாகிஸ்தானை சேர்ந்த நடிகை  சனா ஜாவேத்தை திருமணம் செய்துகொண்டார். அது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பாகிஸ்தான் உள்ளூர் கிரிக்கெட் போட்டி ஒன்றில் மாலிக் விளையாடுவதைப் பார்க்க சனா வந்துள்ளார். அப்போது அவரை வெறுப்பேற்றும் விதமாக ரசிகர்கள் ‘சானியா மிர்சா, சானியா மிர்சா’ என விடாமல் கத்தி கோஷம் போட்டுள்ளனர். முதலில் அதைக் கண்டுகொள்ளாத சனா, ஒரு கட்டத்தில் கோபப்பட்டு ரசிகர்களை முறைத்துப் பார்த்து கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது சம்மந்தமான வீடியோ இணையத்தில் வைரலானது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்