உலகக் கோப்பை தொடர் முடிந்ததும் இம்மாத இறுதியில் இந்திய அணி ஜிம்பாப்வேவுக்கு எதிராக 5 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்நிலையில் இந்த தொடரில் இந்திய அணியின் மூத்த வீரர்கள் அனைவருக்கும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
இளம் வீரர்கள் கொண்ட அணிக்கு ஷுப்மன் கில் கேப்டனாக அறிவிக்கப்பட, ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட இந்திய வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் தற்போது இந்திய அணிக்காக உலகக் கோப்பை கிரிக்கெட் ஆடி வரும் ஷிவம் துபேவுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை.
இந்நிலையில் அணியில் இடம்பெற்றிருந்த நிதீஷ்குமார் ரெட்டிக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் அவருக்கு பதிலாக ஷிவம் துபே அணியில் இணைவார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.