ஐபிஎல் 2024 ஆம் ஆண்டின் 17 ஆவது சீசன் மிகவும் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை அனைத்து அணிகளும் 6 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதன் மூலம் ப்ளே ஆஃப்க்கு செல்லும் அணிகள் எவை என்பது குறித்த விவாதங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் இன்று புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களில் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதும் போட்டி நடக்கிறது. இந்த போட்டியில் வெல்லும் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடிக்கும். இந்த போட்டியில் டாஸை வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளார்.