விரலில் ஏற்பட்ட காயம்.. 5 வாரங்களுக்கு கிரிக்கெட்டில் இருந்து சஞ்சு சாம்சன் ஓய்வு!

vinoth
செவ்வாய், 4 பிப்ரவரி 2025 (08:03 IST)
இந்திய கிரிக்கெட் அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இடம்பிடிக்க கடந்த சில ஆண்டுகளாக போராடி வருகிறார். ஆனால் அவருக்கு போட்டியாக ரிஷப் பண்ட், இஷான் கிஷான் மற்றும் கே எல் ராகுல் ஆகியோர் இருக்கின்றனர். ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தலைமையேற்று வழிநடத்தும் சஞ்சு, இப்போதுதான் இந்திய அணியில் தன்னுடைய இடத்தை நிரந்தரமாக்கியுள்ளார்.

இந்நிலையில்தான் வங்கதேசத்துக்கு டி 20 போட்டியில் அவருக்கு இடம் கிடைத்து சதமடித்து அசத்தினார். அதன் பின்னர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியிலும் அவர் சதமடித்தார். அதே தொடரின் நான்காவது போட்டியில் நேற்று சதமடித்தார். இப்படி ஒரே ஆண்டில் மூன்று சர்வதேச டி 20 சதங்களை அடித்து சாதனைப் படைத்து டி 20 போட்டிகளில் தன்னுடைய இடத்தை உறுதி செய்தார்.

இதையடுத்து இங்கிலாந்து அணிக்கு எதிரான டி 20 தொடரின் ஐந்து போட்டிகளிலும் அவர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த தொடரின் ஐந்தாவது போட்டியின் போது அவருக்கு ஆட்காட்டி விரலில் அடிபட்டதால் அவர் இன்னும் 5 முதல் 6 வாரங்களுக்கு கிரிக்கெட் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்