நேற்று நடந்த கடைசி டி 20 போட்டியில் அபிஷேக் ஷர்மா 54 பந்துகளில் 135 ரன்கள் சேர்த்து அவுட்டானார். அவரது இந்த இன்னிங்ஸில் 7 பவுண்டரிகளில் 13 சிக்ஸர்களும் அடக்கம். இதன் மூலம் டி 20 போட்டிகளில் இந்தியர் ஒருவர் சேர்த்த அதிகபட்ச ஸ்கோர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். இந்த இன்னிங்ஸில் அவரின் ஸ்ட்ரைக் ரேட் 250. சமீபகாலமாக முதல் பந்து முதலே பவுண்டர்களை அடிக்கும் ஒரு அதிரடி பேட்ஸ்மேனாக உருவாகி வருகிறார் இளம் வீரரான அபிஷேக் ஷர்மா.