அபிஷேக் ஷர்மாவை சீக்கிரமே டெஸ்ட் அணியில் சேர்க்கவேண்டும்… ஹர்பஜன் சிங் சொல்லும் காரணம்!

vinoth

செவ்வாய், 4 பிப்ரவரி 2025 (12:05 IST)
சில தினங்களுக்கு முன்னர் இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டி 20 போட்டியில் அபிஷேக் ஷர்மா 54 பந்துகளில் 135 ரன்கள் சேர்த்தார் வான வேடிக்கைக் காட்டினார். அவரது இந்த இன்னிங்ஸில் 7 பவுண்டரிகளில் 13 சிக்ஸர்களும் அடக்கம். இதன் மூலம் டி 20 போட்டிகளில் இந்தியர் ஒருவர் சேர்த்த அதிகபட்ச ஸ்கோர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். இந்த இன்னிங்ஸில் அவரின் ஸ்ட்ரைக் ரேட் 250.

சமீபகாலமாக முதல் பந்து முதலே பவுண்டர்களை அடிக்கும் ஒரு அதிரடி பேட்ஸ்மேனாக உருவாகி வருகிறார் இளம் வீரரான அபிஷேக் ஷர்மா. ஐபில் மூலம் கவனம் ஈர்த்த அபிஷேக் இந்திய அணியில் இடம்பிடித்து தனது முத்திரையைப் பதித்துள்ளார்.

இந்நிலையில் அபிஷேக் குறித்து பேசியுள்ள முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் “அபிஷேக் ஷர்மாவுக்கு மிக விரைவிலேயே டெஸ்ட் அணியில் இடம் கிடைக்கும். டெஸ்ட் போட்டியில் அதிரடியாக விளையாடி போட்டிகளை எதிரணியிடமிருந்து பறிக்கும் சேவாக் போன்ற ஒரு வீரர் எப்போதும் அணிக்குத் தேவை. அந்த வீரராக அபிஷேக் ஷர்மா இருக்கலாம்.” எனக் கூறியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்