ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்த ஆண்டு சீனாவின் ஹாங்சோவ் நகரில் செப்டம்பர் 23 ஆம் தேதி முதல் அக்டோபர் 8 ஆம் தேதி வரை நடக்க உள்ளது. இந்த தொடரில் கிரிக்கெட் போட்டிகளும் நடக்க உள்ளது.
இந்நிலையில் இந்த ஆண்டு இந்த தொடருக்கு இந்திய அணியை அனுப்ப பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. அதையடுத்து இப்போது இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணிக்கு கேப்டனாக ருத்துராஜ் கெய்க்வாட் அறிவிக்கப்பட்டுள்ளார்.