சமீபத்தில் சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் தோல்வியடைந்ததை அடுத்து அந்த அணியின் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவரின் பதவிக் காலம் முடியும் முன்பாகவே நடந்த இந்த நீக்கம் கவனத்தை ஈர்த்தது.
இந்நிலையில் தொடர்ந்து கிரிக்கெட் பற்றிய தன்னுடைய கருத்துகளை யுட்யூப் மூலமாக பேசி வருகிறார். அந்த வகையில் இப்போது அவர் “பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சுக் கூட்டணியை இந்தியா அப்படியே காப்பி அடிக்கிறது. ஹாரிஸ் ரவுஃப் போல உம்ரான் மாலிக் வேகமாக பந்துவீசுகிறார். இடது கை வீச்சாளர் ஷாகீன் ஸ்விங் செய்வது போல அர்ஷ்தீப், அதுபோல வாசிம் ஜூனியர் போல ஹர்திக் பாண்ட்யா வீசுகிறார். ஆனால் பாகிஸ்தானின் சுழல்பந்து வீச்சுக் கூட்டணியை விட இந்தியாவின் சுழல்பந்து வீச்சு சிறப்பாக உள்ளது” எனக் கூறியுள்ளார்.