பயங்கரவாதத்தின் விதைகளை விதைத்தோம்- பாகிஸ்தான் அமைச்சர்

புதன், 1 பிப்ரவரி 2023 (16:26 IST)
பாகிஸ்தான் நாட்டிலுள்ள பெஷாவர் நகரில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் 100 பேர் பலியாகியுள்ள நிலைய்ல், பயங்கரவாதத்தின் விதைகளை  நாங்கள் விதைத்தோம் என்று பாகிஸ்தான் மந்திரி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் நாட்டில் ஷபாஷ் ஷெரீப் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.

நேற்று, முன் தினம் பெஷாவர் நகரில்  உள்ள மசூதியில்,பிற்பகல் தொழுகையில் 400 க்கும் அதிகமானோர் இருந்தனர்.

அப்போது,  பலத்த சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்தது. இதில், 46 பேர் பலியாகினர்,. 150 பேர் படுகாயமடைந்ததாக தகவல் வெளியான நிலையில் 100 பேர் பலியாகியுள்ளனர்.

100க்கும் அதிகமானோர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பெஷாவரில் தாக்குதல் நடத்தப்பட்ட மசூதிக்கு அருகில், போலீஸ் சூப்பிரண்ட் அலுவலகம், போலீஸ் அதிகாரிகள் குடியிருப்புகள் இருப்பதால் 4 அடுக்கு பாதுகாப்புகள் தாண்டி செல்ல முடியும்.

அப்படி இருந்தும், இங்கு வெடிகுண்டு தாக்குதல் நடந்ததால்,  மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், அந்த நாட்டு பாராளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சர் மந்திரி கவாஜா இதுகுறித்து பேசியதாவது:   மதத்தின் பெயரால் பயங்கரவாதம் நடத்தப்பட்டு வருகிறது. நாங்கள் பயங்கரவாதத்தின் விதைகளை விதைத்தோம்.

பெஷாவரில் இந்த தற்கொலை  குண்டுவெடிப்பு  நடத்துவதற்கு முன்பு, தொழுகை நடக்கும் மசூதியின் முன்பு  அந்த நபர் நின்றிருந்தார். இந்தியா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளில் கடவுளை வழிபடும்போது மக்கள் கொல்லப்படுவதில்லை; ஆனால் பாகிஸ்தானில் நடந்துள்ளது.

பாகிஸ்தான் நாடு பயங்கரவாதத்திற்கு எதிராக   ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்