உலகக் கோப்பையில் பாகிஸ்தான் ஆடும் போட்டிகள் சென்னையில் நடக்க வாய்ப்பு!

Webdunia
புதன், 12 ஏப்ரல் 2023 (07:53 IST)
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அரசியல் காரணங்களால் இரு நாட்டு தொடர்களில் விளையாடுவதில்லை. இதனால் இரு நாட்டு ரசிகர்களும் இந்த அணிகள் மோதும் ஐசிசி போட்டிகளை ஒரு வெறியோடு பார்க்க ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் மீண்டும் இருநாட்டு தொடர் நடக்க வேண்டும் என பல முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஷாகித் அப்ரிடி இப்போது இந்திய பிரதமர் மோடியை சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த ஆண்டு நவம்பரில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் முழுக்க முழுக்க இந்தியாவில் நடக்க உள்ளது. இதற்கான பாகிஸ்தான் அணி இந்தியா வரவுள்ள நிலையில் அந்த அணி விளையாடும் போட்டிகளை சென்னை மற்றும் கொல்கத்தாவில் நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்