ஆஸ்திரேலியா இங்கிலாந்து போட்டியின் போது இந்திய தேசிய கீதம் ஒலிபரப்பு.. பாகிஸ்தான் வாரியம் கண்டனம்!

vinoth
ஞாயிறு, 23 பிப்ரவரி 2025 (10:00 IST)
நேற்று நடைபெற்ற இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய போட்டிக்கு முன்பாக தேசிய கீதங்கள் ஒலிபரப்பப்படும் நிகழ்வின் போது தவறுதலாக இந்திய தேசிய கீதம் சில வினாடிகள் ஒலிபரப்பப்பட்டது. அது மைதானத்தில் சலசலப்பை உருவாக்கியது.

இந்நிலையில் இந்த குளறுபடிக்கு ஐசிசி விளக்கம் அளிக்கவேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கண்டனம் தெரிவித்து கடிதம் எழுதியுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் பாகிஸ்தானில் நடக்கும் போட்டிகள் எதிலும் இந்தியா விளையாடவில்லை. அப்படி இருக்கையில் எப்படி பாகிஸ்தானில் நடக்கும் ஒரு போட்டியில் இந்திய தேசிய கீதம் ஒலிபரப்பானது எனக் கேட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடர் தொடங்கியதில் இருந்தே பல சர்ச்சைகள் அடுத்தடுத்து எழுந்து வருகின்றன. சில தினங்களுக்கு முன்னர் இந்தியா- பங்களாதேஷ் போட்டியின் இந்திய ஒளிபரப்பில் தொடரை நடத்தும் பாகிஸ்தான் அணியின் பெயர் இடம்பெறவில்லை என்று கண்டனங்கள் எழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்