எகிறும் எதிர்ப்பார்ப்பு: என்ன செய்யப்போகிறார் கோலி??

Webdunia
வெள்ளி, 1 டிசம்பர் 2017 (13:20 IST)
கோலி தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அடுத்து நடைபெறவுள்ள தென் ஆப்ரிக்காவுடனான தொடரால் அதிக எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 
 
இந்திய அணி, முதன் முறையாக தென் ஆப்பிரிக்கா செல்ல இருக்கிறது. தென் ஆப்பிரிக்கா மண்ணில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது கிடையாது. எனவே, கோலி தலைமையிலான இந்திய அணி மீது அதிக நம்பிக்கை வைக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் தென் ஆப்பிரிக்க தொடர் இந்திய வீரர்கள் தங்களது திறமையை நிரூபிக்க ஒரு வாய்ப்பு என ரவி சாஸ்திரி கூறியுள்ளார். மேலும், வெளிநாட்டு மண்ணில் வெற்றி பெற நிலைத்தன்மை முக்கியமானது. 
 
இந்தய அணி வெளிநாட்டு மண்ணில் வெற்றி பெறும். தற்போதைய இந்திய அணியில் உள்ள வீரர்களால் சிறப்பாக செயல்பட முடியாது என்பதற்கான எந்த காரணத்தையும் நான் பார்க்கவில்லை என கூறியுள்ளார்.
 
அதேபோல், முன்னாள் இந்திய அணி கேப்டன் கபிள் தேவ், தென் ஆப்பிரிக்கா என்றாலும் சரி ஆஸ்திரேலியா என்றாலும் சரி. இந்திய அணி கேப்டன், அணியை எப்படி இயக்க வேண்டும் என்பதை புரிந்து வைத்திருக்கிறார். 
 
அணிக்கு இருக்கும் ஒரே பிரச்சினை, ஆடும் லெவனில் யார் யாரை களம் இறக்குவது என்பதுதான். எந்தவொரு அணியையும் வெற்றி பெற முடியும் என்ற நிலையை இந்திய அணி அடைந்துள்ளதாக நினைக்கிறேன் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்