ஆனாலும், முக்கிய வீரர்களுக்கு மட்டும் இல்லாமல் இந்திய அணியில் இருக்கும் மற்ற இளம் வீரர்களுக்கும் சம்பளத்தை அதிகரிக்கும்படி கோரியுள்ளார் கோலி. ஐபிஎல் போட்டிகளுக்கு பெரிய தொகை ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. பிசிசிஐதான் கிரிக்கெட் சங்கங்களில் அதிக லாபம் பார்க்கும் சங்கமாக இருக்கிறது. எனவே, வீரர்களுக்கான ஊதியத்தை உயர்த்தும் படி கேட்கப்பட்டுள்ளதாம்.