டாஸ் வென்றவர்கள் கோப்பையையும் வெல்வார்களா? ஒரே நொடியில் பேட் கம்மின்ஸ் எடுத்த முடிவு..!

Siva

ஞாயிறு, 26 மே 2024 (19:12 IST)
2024 ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற இருக்கும் நிலையில் சற்றுமுன் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் ஒரு நொடி கூட யோசிக்காமல் பேட்டிங் எடுத்துள்ளார்.

ஹைதராபாத் அணியை பொருத்தவரை பேட்டிங்கில் பலமான அணி என்பதும் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான அபிஷேக் ஷர்மா, டிராவிஸ் ஹெட் ஆகிய இருவரும் அதிரடி ஆட்டக்காரர்கள் என்பதும் தெரிந்தது. அதேபோல் ராகுல் திரிபாதி, மார்க்கம், நிதீஷ் குமார், கிளாசன், அகமது  என ஒரு நீளமான பேட்டிங் வரிசை உள்ளது. அதேபோல் புவனேஷ் குமார், நடராஜன், பேட் கம்மின்ஸ் ஆகிய பவுலர்களும் சிறப்பானவர்கள்.

இருப்பினும் ஹைதராபாத் அணியும் சவால் கொடுக்கும் வகையில் சுனில் நரேன், வெங்கடேஷ் ஐயர், ஸ்ரேயாஸ் ஐயர், குர்பாஸ், ரிங்கு சிங், ரஸல் ஆகிய திறமை வாய்ந்த பேட்ஸ்மேன்களும், ஸ்டார்க், வருண் சக்கரவர்த்தி, நடராஜன், ஹர்ஷித் ரானா ஆகிய திறமையான பந்துவீச்சாளர்களும் கொல்கத்தா அணியில் உள்ளனர் என்பதால் இன்றைய போட்டி விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரு அணியில் விளையாடும் 11 போட்டியாளர்கள் விவரங்கள் இதோ:

கொல்கத்தா: சுனில் நரேன், குர்பாஸ், ஸ்ரேயாஸ் அய்யர், வெங்கடேஷ் அய்யர், ரிங்கு சிங், ரஸல், ரமந்தீப் சிங், ஸ்டார்க், அரோரா, ஹர்ஷித் ரானா, வருண் சக்கரவர்த்தி.

இம்பாக்ட் பிளேயர்ஸ்: அனுகுல் ராய், மனிஷ் பாண்டே, நிதிஷ் ரானா, பரத், ரூதர்போர்டு

ஐதராபாத்: டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி, மார்க்கம், நிதிஷ் குமார், க்ளாசன், ஷபாஸ் அகமது, பேட் கம்மின்ஸ், புவனேஷ்குமார், உனாகட், நடராஜன்

இம்பாக்ட் பிளேயர்ஸ்: அப்துல் சமது, மயங்க் மார்க்கண்டே, பிளிப்ஸ், வாஷிங்டன் சுந்தர், உம்ரன் மாலிக்

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்