நான் சதமடித்தும் ஏன் அணியில் எடுக்கவில்லை… தோனியிடம் கேட்க ஆசைப்படும் முன்னாள் வீரர்!

vinoth
செவ்வாய், 20 பிப்ரவரி 2024 (10:10 IST)
இந்திய அணிக்காக சில போட்டிகள் விளையாடிய மனோஜ் திவாரிக்கு நிலையான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் சர்வதேச போட்டிகளில் இருந்து விலக்கப்பட்ட அவர் ஐபிஎல் மற்றும் ரஞ்சி கோப்பை போன்ற தொடர்களில் விளையாடினார்.

அதன் பிறகு அவர் திர்ணாமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து மந்திரியாகவும் ஆனார். அதன் பின்னர் ரஞ்சி கோப்பை தொடரில் மட்டும் விளையாடி வந்தார்.

இந்நிலையில் இப்போது அவர் தான் விளையாடிய போது கேப்டனாக இருந்த தோனியிடம் ஒரு கேள்வி கேட்கவேண்டும் எனக் கூறியுள்ளார்.  அதில் “நான் சதமடித்து சிறப்பாக விளையாடிய போதும் ஏன் ஆடும் லெவன் அணியில் இடம்பெற முடியவில்லை என அவரிடம் கேட்க ஆசைப்படுகிறேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்