கோலியின் மகளுக்கு மிரட்டல் விடுத்தவர் வாக்குமூலம்!

Webdunia
வெள்ளி, 12 நவம்பர் 2021 (00:16 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மகளுக்கு ஆன்லைன் மூலம் பாலியல் மிரட்டல் விடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் போலீஸிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி கடந்த சில மாதங்களாக சரியாக விளையாடாததால் ஆத்திரமடைந்த ஒரு சில ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சனம் செய்தனர்

இதனை அடுத்து இளைஞர் ஒருவர் அத்து மீறி விராத் கோலியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் ஆன்லைன் மூலம் கொடுத்ததாக தகவல்கள் வெளியானது. இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை செய்ததில் ஹைதராபாத்தைச் சேர்ந்த ராம்நாகேஷ் விராட் கோலி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது

இதனை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் அவரிடம் போலீசார் விசாரணை  செய்யப்பட்டு வருகிறது.

ராம் நாகேஷ்போலீஸிடம் கூறியுள்ளதாவது: பாகிஸ்தான் அணியிடம் இந்தியா தோற்றதால் ஆத்திரத்தில் அப்படி எழுதிவிட்டேன். செல்போன் கீழே விழுந்ததால் அந்தப் பதிவு டுவீட் ஆகிவிட்டது 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்