ஓய்வு முடிவை அறிவித்த கேதர் ஜாதவ்… ‘ஆமா இவர் யாரு’ எனக் குழம்பும் ரசிகர்கள்!

vinoth
திங்கள், 3 ஜூன் 2024 (15:43 IST)
இந்திய அணிக்காக 73 ஒருநாள் போட்டிகள், 9 டி 20 போட்டிகள் விளையாடியவர் கேதர் ஜாதவ். ஒரு நாள் போட்டிகளில் யுவ்ராஜ் சிங் இடம் கிடைக்காமல் தவித்த போது அவருக்கு மாற்றாக இவரை இந்திய அணியில் கொண்டுவந்தனர். தொடக்கத்தில் சில போட்டிகளில் சிறப்பாக விளையாடினாலும்,  அதன் பின்னர் சொதப்ப ஆரம்பித்தார்.

இதனால் அவருக்கு சர்வதேச அணியில் இடம் கிடைக்கவில்லை. அதே போல ஐபிஎல் தொடரிலும் சொதப்ப ஆரம்பித்ததால் அதிலும் வாய்ப்புகளை இழந்தார். இதையடுத்து இந்தி வர்ணனையில் பணியாற்றி வந்தார். இதனால் இவரின் கிரிக்கெட் வாழ்க்கை எப்போதோ முடிந்துவிட்டது என்றே பலரும் நினைத்திருந்தனர். கிட்டத்தட்ட அவரை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மறந்தே விட்டனர்.

இந்நிலையில் இப்போது தன்னுடைய 39 ஆவது வயதில் இவர் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தற்போது கிரிக்கெட் பார்க்கும் 2K கிட்ஸ் பலருக்கு இவர் யாரென்றே தெரியாது. அதனால் பலரும் இந்த அறிவிப்பை ஒரு எள்ளல் தொனியோடு பகிர்ந்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்