அடிக்க வந்த ஜடேஜா.. பேட்டை வாள் போல் சுழற்றிய வார்னர்! – வைரலாகும் வீடியோ!

Webdunia
ஞாயிறு, 21 மே 2023 (06:08 IST)
நேற்று நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் போட்டியில் ஜடேஜா – வார்னர் செய்த குறும்புத்தனம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

ஐபிஎல் சீசனின் கடைசி லீக் போட்டியில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதிக் கொண்டன. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி அதிரடியாக ஆடி 223 ரன்கள் குவித்த நிலையில், அடுத்ததாக களமிறங்கிய டெல்லி அணி 146 ரன்களில் தோல்வியை தழுவியது.

டெல்லி அணியின் அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் அவுட் ஆனபோதும் அணி கேப்டன் டேவிட் வார்னர் நின்று விளையாடி 86 ரன்கள் வரை குவித்தார். கூல் கேப்டன் வகையறாக்களில் ஒருவரான டேவிட் வார்னர் தனது டிக்டாக் வீடியோக்கள் மூலமாக இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இடையேயும் பிரபலமானவர்.

நேற்று நடந்த போட்டியில் டேவிட் வார்னர் ஒரு பந்தை அடித்து விட்டு ரன் ஓட முயன்றார். அப்போது ரஹானே பந்தை எடுத்து வீச அதற்கு டேவிட் வார்னர் ரீச்சுக்குள் பாய்ந்தார். ஓவர் த்ரோவ் ஆன பந்து ஜடெஜா கையில் சிக்க, ஸ்டம்பில் அதை வீசப்போவது போல ஜடேஜா விளையாட்டாக வார்னரை பயமுறுத்தினார். ஆனால் அதற்கு அஞ்சாத வார்னர் தனது பேட்டை ஒரு வாளை போல சுழற்றி காட்டி “நீ தைரியம் இருந்தா வீசு.. நான் பாத்துக்கறேன்” என்பது போல நின்றார். ஜடேஜா – வார்னரின் சேட்டைகளை கண்டு இரு அணியினருமே சிரித்துக் கொண்டனர்.

இந்த வீடியோ வைரலாகியுள்ள நிலையில் “இவ்ளோ நெருக்கடியான மேட்ச்சிலும் எப்படி ஜாலியா இருக்காங்க?” என ஆச்சர்யமாய் பலர் பதிவிட்டு வருகின்றனர்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்