அஷ்வினுக்கு பதிலா ஜடேஜாவை எடுத்தது தவறா? – கிரிக்கெட் ரசிகர்கள் புலம்பல்!

Webdunia
வியாழன், 8 ஜூன் 2023 (07:30 IST)
இந்தியா – ஆஸ்திரேலியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் ரவிச்சந்திரன் அஷ்வின் எடுக்கப்படாதது குறித்து பல ரசிகர்கள் எதிர் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.



உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி இந்தியா – ஆஸ்திரேலியா இடையே லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்த நிலையில் ப்ளேயிங் 11 அணியில் அஷ்வின் இல்லாதது அனைத்து ரசிகர்களுக்குமே அதிர்ச்சியாகதான் இருந்தது.

உலகின் நம்பர் 1 டெஸ்ட் கிரிக்கெட் பந்து வீச்சாளரான அஷ்வினுக்கு பதிலாக பேட்டர், பவுலராக ஜடேஜா அணியில் சேர்க்கப்பட்டார். அணியின் நலன் கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கேப்டன் ரோகித் சர்மா கூறியிருந்தார்.

ஆனால் ஜடேஜா பேஸ் ஸ்பின் பவுலர் என்றால் அணியில் மற்ற பவுலர்களுமே ஃபாஸ்ட் பவுலர்கள்தான். இந்நிலையில் நேற்றைய இன்னிங்ஸில் இந்திய அணியால் மூன்று விக்கெட்டுகளுக்கும் மேல் எடுக்க முடியவில்லை. ஸ்மித்தும், ட்ராவிஸும் நின்று விளையாடி அவர்கள் பார்ட்னர்ஷிப் மட்டுமே 200+ ரன்களை அடித்துக் குவித்துள்ளனர்.

உலகின் நம்பர் 1 டெஸ்ட் பந்து வீச்சாளரை பென்ஞ்சில் அமர வைத்துவிட்டது குறித்து ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் அதிருப்தியான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். ஆனால் ஜடேஜா அஷ்வினுக்கு நல்ல மாற்றுதான் என்றும், ஜடேஜாவும் டெஸ்ட்டில் பல விக்கெட்டுகள் எடுத்துள்ளார், பேட்டிங்கிலும் கலக்கியுள்ளார் என்பதால் இந்தியாவின் பேட்டிங்கிற்கு பிறகுதான் அவரது திறமை தெரியவரும் என்று ஜடேஜாவுக்கு ஆதரவாகவும் பலர் பேசி வருகின்றனர்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்