ஸ்டார் வீரர்களை அள்ளும் சன்ரைசர்ஸ், சிஎஸ்கே! – யார் பக்கம் அதிர்ஷ்டம்? IPL Auction!

Webdunia
செவ்வாய், 19 டிசம்பர் 2023 (15:05 IST)
நடந்து வரும் ஐபிஎல் மினி ஏலத்தில் முக்கியமான ஸ்டார் வீரர்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அள்ளிக் கொண்டிருக்கின்றன.



2024ம் ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிகளில் சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் உள்பட 10 அணிகள் மோதுகின்றன. இந்நிலையில் ஐபிஎல் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கான திருப்பங்கள் ஐபிஎல் ஏலத்தில் நடைபெற்று வருகிறது. ரோகித் சர்மாவை மும்பை இந்தியன்ஸ் அணி விடுத்து ஹர்திக் பாண்ட்யாவை கேப்டன் + ப்ளேயராக உள்ளே கொண்டு வந்துள்ளது.

தற்போது நடந்து வரும் ஐபிஎல் மினி ஏலமும் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. சமீபத்தில் உலக கோப்பையில் நியூசிலாந்து அணியில் விளையாடி பிரபலமடைந்த இந்திய வம்சாவளி வீரரான ரச்சின் ரவீந்திராவை சிஎஸ்கே அணி 1.8 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. அதே போல மற்றொரு நியூசிலாந்து வீரரான டேரியல் மிட்ச்செல்லை வாங்க ஆரம்பம் முதலே டெல்லி கேப்பிட்டல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இடையே பெரும் போட்டி நிலவியது. ஆனால் கடைசியில் 14 கோடி கொடுத்து மிட்ச்செல்லை உள்ளே தூக்கி போட்டுக் கொண்டுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ்.

சன்ரைசர்ஸ் அணியும் ஆரம்பம் முதலே ஸ்டார் ப்ளேயர்களுக்காக வலுக்கொடுத்து வருகிறது. ஆஸ்திரேலிய நட்சத்திர ப்ளேயர் ட்ராவிஸ் ஹெட்டை 6.8 கோடிக்கு எடுத்த சன்ரைசர்ஸ் தற்போது ஆஸ்திரேலிய அணி கேப்டனான பேட் கம்மின்ஸை அதிகபட்சமாக ரூ.20 கோடிக்கு வாங்கியுள்ளது. தற்போதைய ஐபிஎல் மினி ஏலத்தில் அதிக தொகைக்கு வாங்கப்பட்டவர் பேட் கம்மின்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்