ஐபிஎல் காத்திருக்கட்டும்... சுரேஷ் ரெய்னா!!

Webdunia
சனி, 4 ஏப்ரல் 2020 (16:29 IST)
நிலை திரும்பும்போது ஐபிஎல் தொடர் குறித்து யோசிக்கலாம் என சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார். 
 
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு மார்ச் 29 ஆம் தேதி நடக்க இருந்த ஐபிஎல் போட்டி ஏப்ரல் 15 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது என்பது தெரிந்ததே. இந்நிலையில் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் அதற்கு மறுநாளே ஐபிஎல் போட்டி நடத்துவது என்பது சாத்தியமில்லை என்றும் கூறப்படுகிறது. 
 
இந்நிலையில் ஐபிஎல் போட்டி குறித்து சென்னை அணி வீரர் சுரேஷ் ரெய்னா பேட்டியளித்துள்ளார். அவர் கூறியதாவது, ஐபிஎல் தொடரை விட ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையும் முக்கியமானது. மீண்டும் இயல்பு நிலை திரும்பும்போது ஐபிஎல் தொடர் குறித்து யோசிக்கலாம் என கூறியுள்ளார். 
 
சுரேஷ் ரெய்னா கொரோனா நிவாரண நிதியாக ரூ.52 லட்சம் நிதி வழங்கி உள்ளார் என்பது கூடுதல் தகவல்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்