ஐபிஎல் 2024 ஆம் ஆண்டின் 17 ஆவது சீசன் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. அதையடுத்து சில நாட்களாக விறுவிறுப்பாக போட்டிகள் நடந்து வருகின்றன. அனைத்து அணிகளும் ஒரு போட்டியை வென்றுள்ள நிலையில் இந்த வாரத்தில் இரண்டாவது போட்டிகளில் விளையாடி வருகின்றன.
இந்நிலையில் இன்று ஐதராபாத்தில் நடக்கும் போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுமே தங்கள் முதல் போட்டியில் தோல்வியுற்ற நிலையில் முதல் வெற்றியைப் பதிவு செய்யும் முனைப்பில் இரு அணிகளுமே இன்று மும்முரமாக விளையாடும் என்பதால் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
இந்நிலையில் சற்று முன்னர் டாஸ் போடப்பட்ட நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி டாஸை வென்று முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது. ஐதராபாத் அணியில் நடராஜனுக்கு பதில் உனாட்கட் இணைந்துள்ளார்.