ஐபிஎல் 2022-; கொல்கத்தா அணி சூப்பர் வெற்றி

Webdunia
திங்கள், 9 மே 2022 (23:17 IST)
ஐபிஎல் 15 சீசனின் 56 வது போட்டி இன்று மும்பை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையே நடைபெற்றது.

இந்த டாஸில் மும்பை இந்தியன்ஸ் அணி வென்றதையடுத்து பந்து வீச முடிவு செய்தது. அதனால், கொல்கத்தா அணி  முதலில்  பேட்டிங் செய்தது.

இந்த அணியில் வெங்கடேஷ் ஐயர் 43 ரன்களும், ரானா 43 ரன்களும், ரஹானே 25 ரன்களும் அடித்தனர், எனவே 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 165  ரன்கள் அடித்து, மும்பை அணிக்கு 166 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்தது.

இதையடுத்து பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணியில், கிஷான் 51 ரன்களும், பொல்லார்ட் 15 ரன்களும்,, டேவிட் 13 ரன்களும் அடித்தனர். 17.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த மும்பை அணியினர் 113 ரன்கள் மட்டுமே அடித்து, தோற்றனர்.
எனவே, கொல்கத்தா அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்