இன்றைய போட்டியிலும் வெல்லும் முனைப்பில் இந்தியா?: நெருக்கடியில் அயர்லாந்து அணி

Webdunia
வெள்ளி, 29 ஜூன் 2018 (13:53 IST)
அயர்லாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியை வென்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி இன்று களமிறங்கவுள்ளது.
இந்திய அணி அயர்லாந்து அணியுடன் இரண்டு 20 ஓவர் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
இந்நிலையில் , இவ்விரு அணிகளும் மோதும் இரண்டாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று இந்திய நேரப்படி டப்ளின் நகரில் இரவு 8.30 மணிக்கு தொடங்கவுள்ளது. இந்த போட்டி இந்திய அணி வெற்றி பெற்று தொடரை வெல்லும் நோக்கில் களமிறங்கவுள்ளது. அதேபோல் அயர்லாந்து அணி இப்போட்டியை வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் நோக்கில் களமிறங்கவுள்ளது.
 
இப்போட்டியில் இந்திய அணியில் முதல் ஆட்டத்தில் சேர்க்கப்படாத லோகேஷ் ராகுல் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர்  சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்