”வந்த எடம் என் காடு.. நீதான் பலி ஆடு..!” – வெறும் 50 ரன்களில் ஆட்டம் இழந்த இலங்கை!

Webdunia
ஞாயிறு, 17 செப்டம்பர் 2023 (17:19 IST)
இலங்கையில் நடந்து வரும் ஆசியக்கோப்பை இறுதிப்போட்டியில் வெறும் 50 ரன்களில் இலங்கையை சுருட்டி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது இந்தியா.



ஆசியக்கோப்பை போட்டியின் இறுதி போட்டி இன்று நடைபெறும் நிலையில் நடப்பு சாம்பியன் இலங்கை அணியும், இந்திய அணியும் மோதிக் கொள்கின்றன. 3 மணிக்கு தொடங்கிய போட்டி மழை காரணமாக தாமதமாகவே தொடங்கியது.

டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் பரபரப்பு எழுந்துள்ளது. உள்ளே நுழைந்துமே பெரேராவின் விக்கெட்டை ஜாஸ்ப்ரிட் பும்ரா தூக்கினார். தொடர்ந்து 4வது ஓவரில் பந்து வீச வந்த முகமது சிராஜ் தொடர்ந்து அடுத்தடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கையை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார். அடுத்து மீண்டும் அதிரடியான பந்து வீச்சு மூலமாக மொத்தம் 6 விக்கெட்டுகளை அறுவடை செய்தார் சிராஜ்.

நீங்க மட்டும்தான் விக்கெட் எடுப்பீங்களா என களத்தில் இறங்கிய ஹர்திக் பண்ட்யாவும் தன் பங்குக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்த மொத்தம் இருந்த 10 விக்கெட்டுகளும் 15வது ஓவரிலேயே காலியானது.

இந்தியாவின் சூரத்தனமான ஆட்டத்தை சமாளிக்க முடியாமல் வெறும் 50 ரன்கள் மட்டுமே பெற்று மண்ணை கவ்வியுள்ளது இலங்கை. இந்த இலக்கு இந்தியாவிற்கு மிக மிக குறைவான இலக்கு என்பதால் இந்தியா 10 ஓவர்களுக்குள் வெற்றி பெற்று விட வாய்ப்புகள் அதிகம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்