அக்‌ஷர் படேல் வெளியே.. வாஷிங்டன் சுந்தர் உள்ளே! – ஆசியக்கோப்பை இறுதிப்போட்டி அணி விவரம்!

ஞாயிறு, 17 செப்டம்பர் 2023 (14:54 IST)
இன்று நடைபெறும் ஆசியக்கோப்பை போட்டியின் இறுதி போட்டிக்கான இந்திய ப்ளேயிங் 11 அணி அறிவிக்கப்பட்டுள்ளது.ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடங்கி பரபரப்பாக நடந்து வந்த நிலையில் இன்று இறுதி போட்டி நடைபெற உள்ளது. சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான், பங்களாதேஷ், இந்தியா, இலங்கை அணிகள் இடம்பெற்ற நிலையில் அதிலிருந்து இறுதி போட்டிக்கு இந்தியா – இலங்கை அணிகள் தகுதி பெற்றுள்ளன.

இலங்கை அணியில் வல்லாலாகே, ஹசரங்கா என கனமான பந்துவீச்சாளர்கள் உள்ளனர். நடப்பு சாம்பியனான இலங்கை இந்த ஆண்டும் கோப்பையை வெல்லும் முனைப்புடன் உள்ளது. இந்திய அணியின் ஃபார்மும் சிறப்பாகவே உள்ளது. இதனால் கோப்பை யாருக்கு என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

இந்நிலையில் தற்போது இந்திய ப்ளேயிங் 11 அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, கே எல் ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா (துணை கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ஜாஸ்ப்ரிட் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ் ஆகியோர் அணியில் உள்ளனர்.

அக்‌ஷர் படேலுக்கு காயம் ஏற்பட்டதன் காரணமாக அவருக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் விளையாடுகிறார்.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்