இந்திய அணிக்கு உலகக் கோப்பையை வெல்ல 80 சதவீதம் வாய்ப்புள்ளது… அஸ்வின் சொல்லும் கணக்கு!

Webdunia
திங்கள், 23 ஜனவரி 2023 (15:20 IST)
50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் இந்த ஆண்டு நடக்க உள்ளது.

இந்த தொடர் இந்தியாவில் நடப்பதால் இந்திய அணி வெல்வதற்கு அதிக வாய்ப்புள்ளது. ஆனால் வெல்லாமல் போனால் அது மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தும். அதனால் பிசிசிஐ இப்போதே உலகக்கோப்பைக்கான அணியை தயார் செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறது.

இந்நிலையில் இந்திய அணியின் மூத்த சுழல் பந்துவீச்சாளர் அஸ்வின் இந்த தொடரை வெல்ல இந்திய அணிக்கு சுமார் 80 சதவீதம் வரை வாய்ப்புள்ளது எனக் கூறியுள்ளார். மேலும் அவர் “இந்திய அணி சொந்த மைதானங்களில் விளையாடிய கடைசி 18 போட்டிகளில் 14 ல் வெற்றி பெற்றுள்ளது. எனவே இந்திய அணிக்கு உலகக்கோப்பையை வெல்வதற்கு 80 சதவீதம் வரை வாய்ப்புகள் உள்ளன”எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்