கிரிக்கெட் ஒரு குழு விளையாட்டு… சச்சின் கோலி ஒப்பீட்டுக்கு கபில்தேவ் பதில்!

திங்கள், 23 ஜனவரி 2023 (11:33 IST)
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் இதுபற்றி பேசியுள்ள கருத்து கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் தடாலடியான கருத்துகளை சொல்வதற்கு ஒருபோதும் தயங்கியதில்லை. இந்நிலையில் இந்திய அணியின் இருபெரும் ஜாம்பவான் வீரர்களான கோலி மற்றும் சச்சின் ஆகியோருக்கு இடையேயான ஒப்பீடு குறித்து பேசியுள்ள அவர் கிரிக்கெட் ஒரு குழு விளையாட்டு எனக் கூறியுள்ளார்.

மேலும் “ஒவ்வொரு காலத்திலும் சிறந்த வீரர்கள் உருவாகுவார்கள். எங்கள் காலத்தில் கவாஸ்கர், அடுத்து சச்சின், டிராவிட்… இப்போது ரோஹித் மற்றும் கோலி என.  அதனால் சில வீரர்களை மட்டும் நாம் சிறந்த வீரர்கள் என சொல்லமுடியாது. இதில் தனி நபர்களின் சொந்த விருப்பு வெறுப்புகள் இருக்கலாம்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்