இந்திய அணி இங்கிலாந்தில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரில் விளையாட உள்ளது. இதற்கு முன்பாக அயர்லாந்து அணியுடன் இன்று டி20 போட்டியில் மோதவுள்ளது.
இந்த போட்டி இந்திய நேரப்படி 8.30 மணிக்கு டப்ளின் நகரில் நடைபெறயுள்ளது. இந்த போட்டி அவ்வளவு முக்கியமானது இல்லை என்றாலும், அடுத்து இங்கிலாந்துடனான போட்டிக்கு இது உதவியாக இருக்கும் என கருதப்படுகிறது.
கேரி வில்சன் தலைமையிலான அயர்லாந்து அணி எல்லா வகையிலும் இந்தியாவுக்கு சவால் கொடுக்க முயற்சிக்கும். இந்திய அணி வீரர்கள் எதிரணியை மெத்தனமாக எடுத்துக்கொள்ளகூடாது.
2009 ஆம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை தொடரின் போது இவ்விரு அணிகள் ஒரு போட்டியில் விளையாடி அதில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
அயர்லாந்து: கேரி வில்சன், பால்பிர்னி, பீட்டர் சாஸ், ஜார்ஜ் டாக்ரெல், ஜோஷ் லிட்டில், ஆன்டி மெக்பிரைன், கெவின் ஓ பிரையன், வில்லியம் போர்ட்டர்பீல்டு, ஸ்டூவர்ட் பாய்ன்டிர், பாய்ட் ராங்கின், ஜேம்ஸ் ஷனோன், சிமி சிங், பால் ஸ்டிர்லிங், ஸ்டூவர்ட் தாம்சன்.