இரண்டாவது இன்னிங்ஸை ஆடி வரும் இந்தியா விக்கெட் இழப்பின்றி 69 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வெற்றி பிரகாசமாக உள்ளது. முதல் இன்னிங்ஸில் இந்தியா 325 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நியுசிலாந்து அணியின் சுழல்பந்து வீச்சாளர் அஜாஸ் படேல் இந்திய அணியின் 10 விக்கெட்களையும் வீழ்த்தி சாதனைப் படைத்தார். அடுத்து களமிறங்கிய நியுசிலாந்து அணி 62 ரன்களுக்கு சுருண்டது. இதையடுத்து இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 263 ரன்கள் முன்னிலை பெற்றது.
ஆனால் பாலோ ஆன் கொடுக்காமல் இந்திய அணியின் கேப்டன் கோலி இரண்டாவது இன்னிங்ஸை ஆட முடிவெடுத்தார். இந்நிலையில் தொடக்க ஆட்டக்காரர்களாக புஜாரா மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் இறங்கி ஆடிவருகின்றனர். மூன்றாம் நாள் ஆட்டமுடிவில் விக்கெட் இழப்பின்றி 69 ரன்கள் சேர்த்துள்ளது. புஜாரா 29 ரன்களோடும் மயங்க் அகர்வால் 38 ரன்களோடும் களத்தில் உள்ளனர்.