ஐசிசி தரவரிசையில் முதலிடம்… அஸ்வின் சாதனையை சமன் செய்த பும்ரா!

vinoth

புதன், 25 டிசம்பர் 2024 (15:47 IST)
கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அணியின் பவுலிங் யூனிட்டின் முதுகெலும்பாக பும்ரா இருந்து வருகிறார். அந்தளவுக்கு சிறப்பாக விளையாடி வரும் பும்ரா பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியை வெகு சிறப்பாக வழிநடத்தி வெற்றியும் பெறவைத்தார்.

சமீபத்தில் நடந்த காபா டெஸ்ட்டில் 9 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார்.  இதன் மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய இந்திய பவுலர் என்ற சாதனையை பும்ரா படைபுமாத்துள்ளார். இதனால் அவர் தற்போது டெஸ்ட் பவுலர்களுக்கான தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார்.

மேலும் அவர் 904 புள்ளிகள் பெற்று இந்திய அணியின் முன்னாள் வீரர் அஸ்வினின் சாதனையை சமன் செய்துள்ளார். இதுவரை இந்திய பவுலர் ஒருவர் சேர்த்த அதிக புள்ளியாக இந்த சாதனை உள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்