இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 445 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் டிராவிஸ் ஹெட் மற்றும் ஸ்டீவன் ஸ்மித் ஆகியோர் சிறப்பாக ஆடி சதமடித்தனர்.
அதன் பின்னர் இந்திய அணியில் கே எல் ராகுல் மற்றும் ஜடேஜா ஆகியோர் தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொதப்ப கடைசி நேரத்தில் இந்திய அணி பவுலர்களின் போராட்ட பேட்டிங் இன்னின்ஸால் ஃபாலோ ஆனை தவிர்த்து உள்ளது. பத்தாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பும்ரா மற்றும் ஆகாஷ் தீப் அருமையாக விளையாடி இந்திய அணி பாலோ ஆனைத் தவிர்க்க காரணமாக அமைந்தனர்.
இந்நிலையில் இன்று ஐந்தாம் நாள் ஆட்டத்தைத் தொடங்கிய இந்தியா ஒரு சில பந்துகளிலேயே கடைசி விக்கெட்டை இழந்து 260 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 185 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆஸ்திரேலியா அணி தொடங்கவிருந்த நிலையில் மழைக் குறுக்கிட்டதால் ஆட்டம் தாமதமாகியுள்ளது. இதனால் இந்த டெஸ்ட் போட்டி டிராவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.